நற்றிணை மகளிர் அகக்கோட்பாடு
Author : செ.பிரிசில்லா
Abstract :
சமூக வாழ்க்கைத் தளத்தைக் கட்டமைத்து நிலைப்படுத்திப் பயன்கொள்வதற்காக மனிதன் தனக்குத்தானே சில வாழ்வியல் நெறிகளைப் பண்பாடுகளோடு இயைந்த சட்டதிட்டங்களாகவும் விதிமுறைகளாகவும் ஏற்படுத்திக் கொண்டான். அத்துடன் வாழ்வியல் தொடர்பான சில நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் தோற்றுவித்து அதனைத் தன் வாழ்வியலோடு இணைத்து உறவாடப் பயன்படுத்திக்கொண்டான். குடும்பம், இனம், தொழில் வாணிகம் எனப் பன்முகத் தன்மையோடு சமூகம் கட்டமைக்கப்பட்டது. மக்கள், குடும்பம் மற்றும் சமூக வாழ்வியலில் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும், அந்நம்பிக்கைகளின் வழிப்பட்ட பழக்கவழக்கங்களும் வாழ்வியல் செயற்பாடுகளாகிய அவையே மக்களின் பொதுவாழ்வியல் நெறிகளாயின. இதன் அடிப்படையில் நற்றினை கூறும் மக்களின் வாழ்வியல் கூறுகளின் தனித்தன்மைகளையும், அவர்களது பண்பாட்டியல் கூறுகளின் சிறப்புத் தன்மைகளையும் ஆராய்ந்த பொழுது மகளிரின் அகக்கோட்பாடுகள் சிறப்புத் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. அதிலும், ஆறறிவு உடைய மனிதர்களோடே மனிதத் தன்மையோடு உறவாட முன்வராத காலத்திலேயே ஓறறிவு உடைய உயிர்கள் முதலே மனிதத் தன்மையோடு உறவாடிய நற்றிணை மகளிரின் அகக்கோட்பாடுகள் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நற்றிணை மகளிரின் அகக்கோட்பாடுகள் குறித்து ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
Keywords :
சமூக வாழ்க்கை, பொதுவாழ்வியல் நெறிகள், தனித்தன்மை, நற்றிணை மகளிரின் அகக்கோட்பாடுகள்