Download PDF

சம்பந்தர் தேவாரத்தில் உணர்வு வெளிப்பாடு

Author : ச.மோகன்ராஜ்

Abstract :

பக்தி இலக்கியத்தின் முதன்மை நோக்கம் இறைவனை உணர்வுப்பூர்வமாகத் துதிப்பதாகும். அந்த வகையில், பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடிய திருஞானசம்பந்தரின் பாடல்களில் பக்தி உணர்வு என்பது வெறும் கருத்தாக நிலவாமல், அது உடலிலும் உள்ளத்திலும் வெளிப்படும் 'மெய்ப்பாடாக' உருமாற்றம் பெற்றுள்ளது. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் இலக்கணத்தைக் கொண்டு சம்பந்தரின் பாடல்களை அணுகும் போது, அதில் மருட்கை (வியப்பு), உவகை (மகிழ்ச்சி), அழுகை (இரக்கம்) போன்ற உணர்வுகள் எவ்வாறு ஆன்மீக ஆழத்துடன் வெளிப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. குறிப்பாக, பக்தி என்ற ஒற்றைச் சொல் எத்தகைய நுட்பமான உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்டது என்பதைச் சம்பந்தர் தேவாரத்தின் வழி நிறுவுவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

Keywords :

திருஞானசம்பந்தர் தேவாரம், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், பக்தி இலக்கியம், உணர்வு வெளிப்பாடு.