Download PDF

தமிழ் இலக்கண நூல்களில் வேற்றுமைப் பாகுபாடு

Author : கா.தசரதன் மற்றும் முனைவர். இரா.செல்வராஜ்

Abstract :

ஒரு சொற்றொடரில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் உள்ள உறவைக் காட்டுவது வேற்றுமை ஆகும். உலக மொழிகளில் வேற்றுமைகளை உருபு, எண், பொருண்மை ஆகிய மூன்றனுள் ஏதேனும் ஒன்றனுள் அடிப்படையில் வகுத்து விளக்குவர். தமிழ்மொழியின் வேற்றுமைப் பாகுபாடு உருபுகளின் அடிப்படையிலும், வடமொழியின் வேற்றுமைப் பாகுபாடு எண்களின் அடிப்படையிலும், ஆங்கில மொழியின் வேற்றுமைப் பாகுபாடு பொருண்மை அடிப்ப்டையிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வேற்றுமைகள் எட்டு வகைகளாக அமையும் என்று தமிழ்மொழியின் முதன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம் பாகுபடுத்தி விளக்கியுள்ளது. வேற்றுமைப் பாகுபாடு உருபுகளின் அடிப்படையில் தொல்காப்பியம் அமைத்துள்ளது. ஆனால் அப்பாகுபாட்டினை பிற்கால இலக்கண நூல்களான வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், பிரயோக விவேகம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, முத்து வீரியம், சுவாமி நாதம், தொன்னூல் விளக்கம், தமிணூல், இனிய தமிழ் இலக்கணம் போன்றவை பின்பற்றாமல் வடமொழி இலக்கணங்களின் அடிப்படையில் அமைத்துவிட்டன. இருப்பினும் வளர்தமிழ் இலக்கணம் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள வேற்றுமைப் பாகுபாட்டினை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளது. தமிழ் இலக்கணிகளின் வேற்றுமைப் பாகுபாட்டினை மேல்நாட்டு அறிஞரான கால்டுவெல் வடமொழி வேற்றுமைப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைத்துள்ளது தவறானது என்று தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடக் காரணம் அவருடைய நூல் வெளிவந்த பின்பே பல்வேறு தமிழ் நூல்கள் அச்சிடப்பெறவில்லை. ஆகவே தொல்காப்பியர் விளக்கியுள்ள வேற்றுமைப் பாகுபாடு உருபுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும், பிற்கால இலக்கண நூல்கள் வேற்றுமைப் பாகுபாட்டில் பிறழ்ந்துள்ள விதத்தினையும் ஆராய்வதாக இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

Keywords :

வேற்றுமை, உருபு, எண், பொருண்மை, தொல்காப்பியம்.