Download PDF

சாரியை பெயர்களும் புணர்ச்சிகளும்

Author : முனைவர் க. தேவிபாலா

Abstract :

தனித்து இயங்காமல் பெயர் வினைச்சொற்களுடன் இணைந்து புணருவது சாரியை. தொல்காப்பிய முதல் தமிணூல் வரையிலான நூல்கள் குறிப்பிடும் சாரியையின் பெயர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சாரியை பற்றி தொல்காப்பியத்தில் கூறியுள்ள சொற்களைப் பின்பற்றியும் இளம்பூரணர் கூறியுள்ள சாரியை பெயர்களைதான் பிற இலக்கண நூல்கள் பின்பற்றி கூறுகின்றன. சாரியை பெயர்கள் தொல்காப்பியக் காலக்கட்டத்தில் பெயருடன் மட்டும் புணர்ந்தது. தற்காலத்தில் வினைப்பெயருடன் புணருகின்றது. உயிர்நெடிலெழுத்தை முதலாகவுடைய இறுதி நிலைகள் பெரும்பாலும் சாரியை இல்லாமல் புணர்கின்றன. தோன்றல் விகாரத்தில் ஒற்றுகள் தோன்றுவது என்பது இருமொழிக்கும் ஒலியன்களுக்கும் தொடர்புடையதாகவும் சாரியையின் தோற்றமானது இருமொழிகளில் உள்ள ஒலியன்களுக்குத் தொடர்பில்லாமல் தோன்றுகிறது. ‘இன்’ சாரியையின் தன்மையின் பொருட்டு தொல்காப்பியர் முதலில் கூறியுள்ளார் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இன் சாரியை முதல் இறுதி முழுவதும் கெடுவது முதலெழுத்தைப் பொருத்து அமைகிறது. ‘இன்’ சாரியை பற்றி முத்துவீரியமும் தொல்காப்பியமும் கூறுகின்றன. மற்ற நூல்கள் இன் சாரியை பற்றிக் குறிப்பிடவில்லை.

Keywords :

பதம், சாரியை, நிலைமொழி, வருமொழி, பகுதி, விகுதி, புணர்தல், திரிதல்.