Download PDF

திருவாசகத்தில் வாழ்வியல் உவமையும் உருவகமும்

Author : முனைவர் அ.விமலா and கா. மகாலட்சுமி

Abstract :

திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலின் குரு வடிவாய் வந்து திருவடி கொடுத்து மாணிக்கவாசகரை ஆட்கொண்டான் சிவபெருமான். அவ்வாறு சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசகரின் சிவானுபவ மொழிகளே திருவாசகமென்னும் சைவத்திருமறை. அருள்வாதவூரர் சொல்லத் தில்லை அம்பலவர் தாமெழுதியதே திருவாசகம் என்னும் இறைநூல். செழுமை பொதிந்த இலக்கியத்திற்குரிய எல்லாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்ட செவ்வியல் இலக்கியம் திருவாசகம் ஆகும். சிவபுராணம் தொடங்கி அச்சோப் பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பாடற்பகுதிகளைக் கொண்டது திருவாசகம். இந்த ஐம்பத்தொரு பகுதிகளும் வெண்பா, அகவற்பா போன்ற பா வகைகளாலும், சதகம், பதிகம், ஊசல், சாழல், தசாங்கம் போன்ற பல்வேறு இலக்கிய வகைகளாலும் அமைந்தவை ஆகும். இக்கட்டுரை ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் நான்கு பாடல்களில் முதற்பாடலான சிவபுராணம் கலிவெண்பா எனும் பா வகையைச் சார்ந்தது. கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி மற்றும் போற்றித்திருவகவல் ஆகியவை அகவற் பாக்களால் ஆனவை. இந்த கட்டுரையில் மாணிக்கவாசகசுவாமிகள் எடுத்தாண்டுள்ள சில உவமைகள் மற்றும் உருவகங்களையும் ஆராய்வதே பொருள். இது திருவாசகத்தில் சிவபுராணம் மகாமேரு போன்று ஒரே செங்குத்தாயிருக்கிறது என்பதையும், அதைப் பூலோகக் கயிலாயம் எனலாம் என்பதையும் குறிப்பிடுகின்றது. இது மேற்கண்ட நான்கு பாடல்களில் உள்ளது.

Keywords :

உவமை-உவமானம், உருவகம்-உவமேயம், உவமவுருபு-வினைபயன் மெய் உரு