மார்க்சிய நோக்கில்-சேர அரசியலின் அரசியல் முன்னகர்வும் அதனூடான பொருளாதார வைதீகக் கலப்பு நிலைகளும்
Author : P Muthusamy
Abstract :
தொகை நூல்கள் எட்டினுள் ஒன்றாகத் திகழ்வது “பதிற்றுப்பத்து” இந்நூல் சேர அரச மரபின் பத்துமன்னர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிப்பனவாய் அமைந்துள்ளது, இதில் முதல் பத்து கடை பத்து கிடைத்ததில. எஞ்சிய இலக்கியச் செய்யுள் வழி கிடைக்கப்பெற்ற செய்திகளை மார்க்சிய நோக்கில் ஊடாடி கண்டதன் பொருளாகச் சேர மரபு சீறூர் மன்னர்கள் என்னும் சிறிய நிலப்பரப்பை ஆளுகை செய்த நிலையிலிருந்து பேரரசு நிலைக்குச் செல்ல இரு காரணிகளை கைக்கொள்கின்றனர். முதல் காரணிகளாக அமையப் பெற்ற போர்வெற்றிகள் மூலம் நிலவிரிவாக்கம் செய்து “பெரு நிலவுடைமையாளர்களாக” மாற்றம் பெற்ற வரலாற்றுத் தரவுகளை முறையே மன்னர் வரிசையில் குறிப்பிட்டும். இதனூடான செல்வங்கள் என்னும் வாணிபத்தினால் ஈட்டப்பட்ட “பொருளாதார வளமைகளை” குறிப்பிட்டும் விளக்கியமைந்து. மற்றுமொரு இணை காரணிகளாக “புனிதத்தன்மை, புத்தாக்கம், மேன்மைத்தன்மை” என்னும் மேட்டுக்குடி நிலைகளை வடபுல அரசர்களைப் (மெளரியர்) போல் வேத வேள்விகள் மூலமாக பெற்றுக்கொண்டு கட்டமைத்துக் கொண்ட “கருத்துருவாக்கம்” என்னும் இரு நிலைகளையும் விளக்கி மொழிவதாக இவ்வாய்வு அமைகின்றது.
Keywords :
பதிற்றுப்பத்து. நிலவுடைமை. மார்க்சியம். மேட்டுமைநிலை. செல்வவளங்கள். வைதீகநெறி