பண்டைத் தமிழர்களின் வாழ்வியலும் வாழ்வியல் முறைகளும்
Author : முனைவர் கு. கீதா
Abstract :
தமிழகத்தின் வரலாற்றில் சங்க காலம் மிக முக்கியமானதாகும். இக்காலத்தில் தமிழர்கள் நாகரிகமாகவும் கலாசார ரீதியிலும் மேம்பட்ட நிலையில் இருந்தனர். சங்க இலக்கியங்கள் மூலமாக, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட மூன்று பேரரசுகள் இக்காலத்தில் இருப்பதை அறியலாம். இம்மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நாட்டிற்கு பல நன்மைகளைச் செய்து, அதன் மேன்மையை உயர்த்தியவர்கள். ஆதிக்கப் போட்டிகள் மன்னர்களுக்குள் இருந்தபோதிலும், அவர்கள் பொதுவாக நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். அரசியல் நடவடிக்கைகளில் மக்களின் பங்கும் முக்கியத்துவம் பெறியது, அதனால் அக்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய முயல்வது முக்கியமாகிறது.
Keywords :
அறம், பொருள், இன்பம், வீடு, காதல், வீரம்