Download PDF

திணை மயக்கம்: தொல்காப்பியம்–நம்பியகப்பொருள் ஒப்பீடு

Author : முனைவர் பி. பாலசுப்பிரமணியன்

Abstract :

உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களின் நாகரிகத்தைக் காட்டும் பொருள் இலக்கணம் இல்லை. அந்தப் பொருள் இலக்கணத்தைக் கொண்டிருப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும். குறிப்பாக, தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வடிவங்களையும் அதன் பிற சிறப்புக் கூறுகளையும் ஆராய்ந்து அறிவதற்கு ஒரு சிறந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதாகப் பகுக்கப்பட்ட அகத்திணையியலில் நூற்பாக்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள திணைமயக்கம் பற்றியும் இடைக்காலத்தில் அகப்பொருள் இலக்கணத்தைத் தனித்து வரையறுத்த நம்பியகப்பொருள் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள திணைமயக்கம் பற்றியும் ஒப்பீட்டு நோக்கில் ஆராய்கிறது இக்கட்டுரை.

Keywords :

அகப்பொருள், இலக்கணம், தொல்காப்பியம், நம்பியகப்பொருள், பொருளிலக்கணம், திணை, பொருள், திணைமயக்கம்