திருவிவிலியத்தில் இயேசுவின் புதுமைகளில் நெய்தல் நிலம்
Author : ந.ஆ. வேளாங்கண்ணி
Abstract :
இறைமகன் இயேசு கிறிஸ்து தமது வாழ்க்கையில் பல புதுமைகள் நிகழ்த்தினார் என்று திருவிவிலியத்தில் உள்ள நான்கு நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியவற்றின் வழியாக அறியமுடிகிறது. இயேசு நிகழ்த்திய புதுமைகளின் அடிப்படையே மக்களை நம்பிக்கை வாழ்விற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். இத்தகைய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏறக்குறைய முப்பத்தி நான்கு புதுமைகள் நிகழ்த்தியுள்ளார் என்று அறியமுடிகிறது. இப்புதுமைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
1. உடல் சார்ந்த புதுமைகள்
2. உணவு சார்ந்த புதுமைகள்
3. இயற்கை சார்ந்த புதுமைகள்
என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஆனால் இக்கட்டுரையில் இயற்கை சார்ந்த புதுமைகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. எனவே இயற்கை சார்ந்த புதுமைகள் என்னெவென்றும்? ஏன் நிகழ்ந்தன? எங்கு நிகழ்ந்தன? இவை எந்த நிலத்திற்குரியவை? நெய்தல் நிலத்திற்குரியவையா என்றும்? அவ்வாறு அமைந்தால் அதற்கானச் சான்றுகள் உள்ளனவா என்றும்? நெய்தல் நிலத்தின் அடிப்படை விளக்கம் என்னவென்றும்? இதுபோன்ற கேள்விகளை முன் வைத்து ஆய்வாகவும் தேடலாகவும் இக்கட்டுரை அமைகின்றது.
Keywords :
நெய்தல் நிலம், நேரம், இயேசுவின் புதுமை