Download PDF

தமிழ்ச்சமூக அலைகுடி மரபில் அகவுநரின் இருப்பும் இல்லாமையும்

Author : முனைவர் பி. பாலசுப்பிரமணியன்

Abstract :

தமிழ்மொழி சொல் வளமுடையது. பண்டைத் தமிழிலக்கியங்களிலிருந்து சமகால இலக்கியம் வரை தமிழில் சொற்கள் விரவிக் கிடக்கின்றன. சொற்களைத் தேடிக் கண்டடைவதும் சொல்லின் பொருளில் ஆழங்கால் படுதலும் இன்றியமையாததாகும். ‘கடிசொல்லை இல்லை காலத்துப் படினே’ என்ற தொல்காப்பியரின் கூற்றைப் போல எல்லாக் காலத்துக்குமான சொல் என்பதொன்றும் இல்லை. காலத்திற்கேற்றவாறு புதிய சொற்கள் உருவாகின்றன. அந்தச் சொற்களுக்கான பொருள்களும் மாறுபடுகின்றன. ஒரு சொல் வேறொரு சொல்லாகத் திரிந்து, ஒரே பொருளைத் தரும் சூழலையும் காண முடிகிறது. சொற்களாலும் மொழியாலும் தான் இந்த இலக்கிய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ்ச்சமூக அலைகுடி மரபில் ‘அகவுநர்’ என்ற சொல்லின் பொருள் குறித்தும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அகவுநர் பற்றிய இருப்பு குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது.

Keywords :

அகவவர்ணா, தமிழ் சமூகம், அகநானூறு-அகவுநர்